நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை போக்குவரத்து சபையின் பல்வேறு தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
தனியார் பேருந்துகளுடன் கூட்டு நேர அட்டவணையில் பேருந்துகளை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனுடன் தொடர்புடைய மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் ஐக்கிய சேவை சங்கத்தின் தலைவர் நிரோஷன் சம்பத் பிரேமரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டு நேர அட்டவணையில் பல சிக்கல்கள் இருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவும் கூறியுள்ளார்.
ஆனால், அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களின் அடிப்படையிலேயே கூட்டு நேர அட்டவணை தயாரிக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குமார குணசேன, தொழிற்சங்கங்கள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுவிட்டதால், இந்த வேலைநிறுத்தம் நியாயமற்றது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்த போதிலும், நேற்று நள்ளிரவு முதல் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வழமைபோலவே இயங்குவதாக “அட் தெரண” செய்தியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
Various trade unions of the Sri Lanka Transport Board (SLTB) began a strike from midnight yesterday, raising four demands. The strike was initiated in protest of the decision to operate buses on a joint timetable with private buses. While the SLTB unions and private bus owners’ association have criticized the new timetable, the National Transport Commission stated that it was developed with the input of all parties. The Deputy Minister of Transport has called the strike unjustified, noting that most of the unions’ demands have already been met. Despite the strike announcement, buses from the Colombo Central Bus Stand were reported to be operating as usual.