இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, குளோபல் ஃபைனான்ஸ் இதழின் 2025-ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியாளர் அறிக்கை அட்டைகளில் (Global Finance’s Central Banker Report Cards 2025) உயரிய ‘ஏ’ தர மதிப்பீட்டைப் பெற்றுள்ளார்.
இந்த அங்கீகாரம், உலகின் மிகவும் மதிக்கத்தக்க மத்திய வங்கி ஆளுநர்களின் பட்டியலில் அவரை இணைத்துள்ளது.
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைத்து நிலைப்படுத்துவதில் அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பு மற்றும் மூலோபாய அறிவு ஆகியவற்றின் காரணமாகவே இந்த உயர்ந்த ‘ஏ’ தர மதிப்பீடு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
1994-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த மதிப்பீடு, உலகின் சுமார் 100 நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களின் செயல்பாட்டை ஆராய்கிறது.
பணவீக்கக் கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி, பணத்தின் நிலைத்தன்மை, வட்டி விகித மேலாண்மை மற்றும் அரசியல் சுதந்திரம் போன்ற துறைகளில் அவர்களின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, ‘ஏ+’ முதல் ‘எஃப்’ வரையிலான தரங்களில் இந்த மதிப்பீடு வழங்கப்படுகிறது.
Dr. Nandalal Weerasinghe, the Governor of the Central Bank of Sri Lanka, has been awarded an ‘A’ grade in Global Finance’s Central Banker Report Cards for 2025. This prestigious rating, which places him among the world’s most respected central bank governors, recognizes his exceptional contributions and strategic leadership in stabilizing Sri Lanka’s economy during its severe economic crisis. The annual report, which has been conducted since 1994, evaluates central bankers based on their performance in inflation control, economic growth, currency stability, interest rate management, and political independence.