தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இலங்கை மின்சார சபையை நான்கு தனித்தனி நிறுவனங்களாகப் பிரித்து நிர்வகிக்க தீர்மானித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சியின் கொள்கைப் பிரகடனத்தின்படி, இலங்கை மின்சார சபை எந்தக் கட்டத்திலும் பிரிக்கப்படவோ அல்லது தனியார்மயமாக்கப்படவோ மாட்டாது என்று முன்பு வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
தற்போதைய சூழலில், மின்சார சபையின் நிர்வாகம் மற்றும் அதன் ஏனைய நடவடிக்கைகளை எளிதாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மின்சார சபை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, நான்கு வெவ்வேறு நிறுவனங்களாகச் செயல்படவுள்ளது.
இந்த நான்கு நிறுவனங்களும் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களாகவே தொடக்கத்தில் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழுப் பங்குகளும் அரசாங்கத்திடமே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The National People’s Power (NPP) government has decided to split the Sri Lanka Electricity Board (CEB) into four separate companies to improve its management and operations. This decision contradicts the party’s previous election promise that the CEB would not be divided or privatized. The new entities will initially operate as four government-owned private companies, with all shares remaining under the government’s control.