இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் மீதான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
இந்த வரி திருத்தம் நேற்று (26) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதுகுறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கான விசேட பண்ட வரி 60 ரூபாவில் இருந்து 80 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கான வரி 10 ரூபாவில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி உயர்வு மூன்று மாதங்களுக்குச் செல்லுபடியாகும் என நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காய விவசாயிகளைப் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தங்களது விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கடந்த சில நாட்களாகக் குறை கூறி வந்தமை குறிப்பிடத்தக்கது.
The government has decided to increase the special commodity tax on imported potatoes and big onions, effective from yesterday (26). The tax on a kilogram of potatoes has been raised from Rs. 60 to Rs. 80, while the tax on a kilogram of big onions has been increased from Rs. 10 to Rs. 50. This three-month tax increase aims to protect local farmers who have been protesting for a fair price for their produce.