எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக, ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்துப் பொலிஸார் கூறுகையில், நேற்று இரவு 9 மணியளவில் எல்லையிலிருந்து வெல்லவாய நோக்கிப் பயணித்த பேருந்து, எதிரே வந்த ஜீப் வண்டியுடன் மோதி, பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15 பேர் உயிரிழந்ததுடன், 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குக் காரணமான ஜீப் வண்டியின் சாரதியே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
One person has been arrested in connection with the fatal bus accident on the Ella-Wellawaya road that killed 15 people and injured 18 others last night. According to police, the bus, which was traveling from Ella to Wellawaya, collided with an oncoming jeep and fell into a ditch. The driver of the jeep has been taken into custody.