குஜராத் மாநிலத்தின் பவநகர் மாவட்டம், தலஜா நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர், தனது பெற்றோர் மற்றும் 29 வயது மூத்த சகோதரருடன் வசித்து வருகிறார்.
இந்த மூத்த சகோதரருக்குத் திருமணமாகி, அவரது மனைவி வெளியூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அந்த நபர் தனது இளைய சகோதரியைக் கத்தி முனையில் மிரட்டிப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இரண்டாவது முறையும் அவர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதோடு, இளம்பெண்ணின் வலது தொடையில் பீடியால் சூடு வைத்துள்ளார். இதனால் வேதனையில் அலறிய அந்தப் பெண், துணிச்சலாகப் பொலிஸில் புகார் அளித்தார்.
விசாரணையில், அந்த இளம்பெண் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
இந்தக் காதல் விவகாரம் மூத்த சகோதரனுக்கு முன்பே தெரிந்திருக்கிறது. அவளது காதலை முறிப்பதற்காகவே, இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டது பொலிஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
A 29-year-old man in Bhavnagar district, Gujarat, has been arrested for allegedly raping his 22-year-old sister at knifepoint. The horrific incident occurred while his wife was away at her parents’ home. According to the police investigation, the man committed the assault to force his sister to end her three-year relationship with a local boy. The sister bravely reported the crime, which also included the man burning her with a cigarette.