கனடாவின் பர்லிங்டன் நகரில் இடம்பெற்ற சாலை விபத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். கெர்ன்ஸ் வீதி மற்றும் டுன்டாஸ் வீதி சந்திப்பில் இந்த விபத்து இடம்பெற்றது.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹோண்டா மோட்டார் சைக்கிள், மேற்கு நோக்கிச் சென்ற ஃபோர்டு எஸ்.யூ.வி வாகனத்துடன் மோதியுள்ளது.
இந்த மோதலில், அங்கு நின்றிருந்த மேலும் இரண்டு வாகனங்களும் சேதமடைந்தன.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாட்டர்டவுன் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர், விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார். எஸ்.யூ.வி. வாகனத்தைச் செலுத்திய 56 வயது மில்டன் பகுதியைச் சேர்ந்த நபருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
A 19-year-old man died in a road accident in Burlington, Canada, at the intersection of Kerns Road and Dundas Street. According to initial police investigations, a Honda motorcycle traveling eastbound collided with a westbound Ford SUV, also damaging two other parked vehicles. The 19-year-old motorcyclist from Watertown died at the scene, while the 56-year-old Milton resident driving the SUV was unharmed. Investigations into the incident are ongoing.