சஃபோல்க்கில் கால்பந்து மைதான கழிப்பறையில் சார்லோட் ராபின்சன் கர்ப்பம் தெரியாமல் குழந்தை பெற்றார்.

இங்கிலாந்தின் சஃபோல்க் நகரில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தின் கழிப்பறையில், 29 வயதுடைய பெண் ஒருவர், தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமலேயே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சார்லோட் ராபின்சன் என்ற அந்தப் பெண், இந்த நிகழ்வை தனது வாழ்க்கையின் மிகப்பெரிய அதிர்ச்சி என்று கூறுகிறார். ஆகஸ்ட் 24 அன்று கிர்க்லி மற்றும் பேக்ஃபீல்ட் கால்பந்து கிளப்களுக்கு இடையேயான ஒரு போட்டியை சுமார் 600 பேருடன் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை உணர்ந்த அவர், ஒரு பச்சிளம் குழந்தையின் தலை வெளியே வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
29 வாரங்கள் கர்ப்பமாக இருந்தபோதிலும், ராபின்சனுக்கு தான் கர்ப்பமாக இருப்பது குறித்த எந்த அறிகுறியும் தென்படவில்லை. அவரது வயிறு பெரிதாகத் தோன்றவில்லை, மேலும் வயிற்றில் எந்த அசைவையும் அவர் உணரவில்லை. இந்த காலகட்டத்தில் அவர் லண்டனுக்குப் பயணம் செய்து தனது வழக்கமான அலுவலகப் பணிகளையும் மேற்கொண்டு வந்துள்ளார்.
A 29-year-old woman in Suffolk, England, named Charlotte Robinson, gave birth to a baby in a football stadium restroom without knowing she was pregnant. She described the birth as the “biggest shock of my life.” Despite being 29 weeks pregnant, she experienced no visible signs, such as a growing belly or fetal movement, and continued her normal work and travel schedule.


