தமிழில் ‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்தின் வழியாக நடிகை அபர்ணா பாலமுரளி அறிமுகமானார்.
அதன்பிறகு ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘சர்வம் தாளமயம்’ படத்தில் நடித்திருந்தாலும், அபர்ணா பாலமுரளிக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்தது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம். சுதா கொங்கரா இயக்கிய இந்த படத்தில், பொம்மி என்ற மதுரையைச் சேர்ந்த பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
‘பொம்மி’ பாத்திரத்திற்காக தேசிய விருது, ஃபிலிம்பேர், சைமா விருதுகள் என பல விருதுகளை அவர் வென்றார். கடைசியாக தமிழில் ‘ராயன்’ படத்தில் நடித்த இவர், தற்போது மலையாள படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில், அபர்ணா பாலமுரளி ஒரு சோகமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறும்போது, “ஒருமுறை பொது இடத்தில் எனக்கு அறிமுகமில்லாத ஒருவர் என்னிடம் வந்து, ‘என்ன அபர்ணா, மிகவும் குண்டாகிவிட்டீர்கள், நன்றாகச் சாப்பிடுவீங்க போல’ என்று சொன்னார். அந்த வார்த்தைகள் என்னை மிகவும் மன வேதனை அடையச் செய்துவிட்டன.”
“நான் அவரிடம், ‘என் எடை கூடிவிட்டது என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம்? இதுபோல தனிப்பட்ட விமர்சனங்கள் பற்றி நீங்கள் எதுவும் பேசக்கூடாது’ என்று சொன்னேன். மேலும், ‘பொது இடங்களில் யாருடைய உடல் தோற்றம் குறித்தும் இப்படிப்பட்ட கருத்துகளைச் சொல்வது மிகவும் தவறானது’ என்றும் சுட்டிக்காட்டினேன்.”
“இந்த சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆனாலும், அது இன்னும் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது” என்று அபர்ணா மனம் திறந்து பேசியுள்ளார்.
In a recent interview, actress Aparna Balamurali shared a painful experience where a stranger publicly commented on her weight gain, making her feel humiliated. She confronted the person, highlighting that it is wrong to make personal remarks about someone’s appearance in public. Although the incident happened months ago, she says it has left a lasting impact on her.