கென்யாவில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவர், யானையின் தும்பிக்கையில் பியரை ஊற்றி அருந்தக் கொடுக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கென்யா அரசு இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
வனவிலங்கு சரணாலயம் ஒன்றில் பிரபலமான ‘டஸ்கர்’ பியரைக் குடித்துவிட்டு, மீதமிருந்ததை யானைக்குக் கொடுப்பது போல் படமாக்கி, “தந்தமுள்ள நண்பனுடன் ஒரு டஸ்கர் பியர்” என்று அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
இதைக் கண்ட கென்யர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால், அந்தப் பதிவு உடனடியாக அவரது கணக்கிலிருந்து நீக்கப்பட்டது. பிபிசி ஊடகம் இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளது. வீடியோவில் உள்ள நிலப்பரப்பு மற்றும் ஆண் யானை ஆகியவற்றைக் கொண்டு, இது மத்திய மாகாணமான லைக்கிபியாவில் உள்ள ‘ஓல் ஜோகி’ சரணாலயத்தில் படமாக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
கென்யா வனவிலங்கு சேவை (KWS) மற்றும் சரணாலய நிர்வாகம் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன. அந்தச் சுற்றுலாப் பயணி விதிமுறைகளை மீறியுள்ளதாகவும், இதுபோன்ற செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் சரணாலய ஊழியர் ஒருவர் தெரிவித்தார். மேலும், அவர் மற்றொரு சரணாலயத்தில் காண்டாமிருகத்தைத் தொட்டு உணவளிக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இதுவும் விதிகளுக்கு எதிரானது. இந்த நடத்தை அந்த நபரின் உயிருக்கும், விலங்குகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் மாசாய் மாராவில் சுற்றுலாப் பயணிகள் காட்டு விலங்குகளின் இடப்பெயர்ச்சிக்கு இடையூறு செய்த சம்பவத்தைத் தொடர்ந்து, கென்ய சுற்றுலா அமைச்சு வனவிலங்குப் பூங்காக்களில் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
A Spanish tourist in Kenya is under investigation after posting a video on Instagram of himself giving beer to an elephant. The video, which sparked outrage, was reportedly filmed in the ‘Ol Jogi’ sanctuary. The Kenyan Wildlife Service and sanctuary management are investigating the incident, stating that the tourist violated park rules. The tourist had also posted another video of himself feeding a rhinoceros, which is also against regulations.