அமெரிக்கக் கடற்படையின் USS டுல்சா (LCS 16) என்ற போர்க்கப்பல், நேற்று (27) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட செய்தியின்படி, வேகம் மற்றும் பல்துறைத் திறன் கொண்ட இந்தக் கப்பல், ஆழமற்ற மற்றும் திறந்த கடலில் இயங்கும் ஆற்றல் கொண்டது.
மேலும், இந்தக் கப்பலின் வருகை, அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான உறவையும், சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான இரு நாடுகளின் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது.
கடல்சார் பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இந்த கப்பல் ஓர் உறுதுணையாக இருக்கும் என அமெரிக்கத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
The U.S. Navy’s USS Tulsa (LCS 16) warship arrived at the Port of Colombo yesterday. The U.S. Embassy in Sri Lanka stated that the vessel, built for speed and versatility, can operate in both shallow and open seas. The visit highlights the strong partnership between the two countries and their shared commitment to a free and open Indo-Pacific region.