ஹொரவப்பொத்தானை – கஹடகஸ்திகிலிய பிரதான வீதியில், எலயாபத்து பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (28) பிற்பகல் நிகழ்ந்தது.
வவுனியாவிலிருந்து அநுராதபுரத்திற்கு கண்ணாடியை ஏற்றிச் சென்ற லொறி, சாரதியின் நித்திரைக் காரணமாக வீதியை விட்டு விலகி, பாலத்தின் தடுப்பு வேலியில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில், பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 10 வயது பாடசாலை மாணவி ஒருவரும், 27 வயது லொறி உதவியாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த லொறிச் சாரதியும் மற்றுமொருவரும் ஹொரவப்பொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஹொரவப்பொத்தானை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து ஹொரவப்பொத்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
A road accident in Horowpothana claimed the lives of two people, including a 10-year-old schoolgirl. The accident occurred when a lorry, transporting glass from Vavuniya to Anuradhapura, veered off the road and hit a bridge railing, reportedly because the driver fell asleep. The deceased include the schoolgirl and the 27-year-old lorry assistant. The driver and another passenger were injured and transferred to Anuradhapura Hospital for further treatment. Horowpothana police are conducting a further investigation.