Saturday, August 30, 2025

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 12 வருடங்கள் கடூழியச் சிறை!

கடுவலை, வெலிவிட்ட பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க நேற்று (26) 12 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

சந்தேகநபர் 20,000 ரூபாய் நீதிமன்றக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

அதேசமயம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 300,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையேல், மேலும் ஒரு வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.

வெல்லம்பிட்டி, கல்முல்லை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி, நீதிமன்ற உத்தரவின் பேரில் மார்கமயிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளார்.

அவர் பாடசாலை முடிந்து வேலை தேடிப் புறக்கோட்டைக்குச் சென்றபோது, சந்தேகநபர் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் திகதியன்று அல்லது அதற்கு அண்மித்த நாளில், கடுவலையில் உள்ள வெலிவிட்ட பகுதியில் இருக்கும் ஒரு உறவினரின் வீட்டிற்கு அந்தச் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இவை அனைத்தும் ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

The Homagama High Court has sentenced a man to 12 years of rigorous imprisonment for sexually assaulting a minor in the Kaduwela-Weliwita area. The court also ordered the man to pay a court fee of 20,000 rupees and 300,000 rupees in compensation to the victim. Failure to pay these fines will result in additional prison sentences. The assault, which was proven with evidence, occurred on or around March 4, 2012, when the accused lured the victim to a relative’s house.

Hot this week

முடி வளர்ச்சிக்கு வெங்காயத்தினை இப்படி தான் பயன்படுத்தணுமா?

முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெங்காயச் சாறு ஒரு சிறந்த தீர்வாகக்...

கென்யாவில் யானைக்கு பியர் கொடுத்த சுற்றுலாப் பயணி – விசாரணை!

கென்யாவில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவர், யானையின் தும்பிக்கையில் பியரை ஊற்றி...

நடைப்பயிற்சி: ஜப்பானிய டெக்னிக்! மூட்டு வலி, சர்க்கரை நோய் குறையும்!

நடைப்பயிற்சியின் மூலம் உடல் எடையைக் குறைத்து, உடல் நலனை மேம்படுத்த முடியுமா...

பல்கலைக்கழக பகிடிவதை: 4 மாணவர்கள் கைது!

களனி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம்...

யாழ்ப்பாணத்தில் உணவக கழிவு நீரை வெளியேற்றியவருக்கு அபராதம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் கழிவு நீரை வீதியில்...

Topics

Gold Loan officer (Male) Vacancy

Vacancy available in Alliance Finance Kurumankadu as Gold Loan officer...

திருமணமான பெண் வீட்டை விட்டு ஓட்டம்!

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில், திருமணமான ஒரு பெண், கடந்த ஓராண்டில் தனது...

பொலித்தீன் தொழிற்சாலையில் தீ விபத்து!

நவகமுவ, தெடிகமுவ ஜய மாவத்தையில் உள்ள ஒரு பொலித்தீன் உற்பத்தி செய்யும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img