மேற்கு சூடானில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவு கடந்த ஆகஸ்ட் 31-ஆம் திகதி ஏற்பட்டிருந்தாலும், அதன் பாதிப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (செப்டம்பர் 2) வெளியாகியுள்ளது.
சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, இந்த நிலச்சரிவில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச அமைப்புகளின் உதவியை சூடான் அரசு நாடியுள்ளது.
A massive landslide in western Sudan, caused by continuous adverse weather, has officially claimed over a thousand lives. Although the incident occurred on August 31st, the official announcement of the scale of the tragedy was made today, September 2nd. International media reports indicate that many people are still missing. Sudan has requested assistance from the United Nations and other international organizations for rescue operations.