ஜப்பானின் அயிச்சி மாகாணத்தில் உள்ள டோயோகே நகரம், தனது குடிமக்கள் வேலை அல்லது பள்ளி நேரங்களுக்கு வெளியே ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தினசரி இரண்டு மணி நேரமாகக் குறைக்க ஒரு சட்டத்தைப் பரிந்துரைத்துள்ளது. இது கட்டாயமில்லை.

இந்த முயற்சி உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகளைத் தடுக்கவே என்று நகர மேயர் மசாஃபுமி கோகி தெரிவித்தார். இந்த வரைவுச் சட்டத்தின்படி, மாணவர்கள் இரவு 9 அல்லது 10 மணிக்குப் பிறகு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த யோசனைக்கு ஆன்லைனில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலர் இது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று கருத்து தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்த மேயர், இந்த வரம்பு கட்டாயமில்லை என்றும், ஸ்மார்ட்போன் அன்றாட வாழ்வில் அவசியமானது என்பதை இந்நகரம் அங்கீகரிப்பதாகவும் விளக்கமளித்தார்.
இந்தச் சட்டம் அடுத்த வாரம் பரிசீலிக்கப்படும்.