டீ குடிக்கலன்னா எனக்கு காலையே விடியாதுன்னு சொல்றவங்களை நாம நிறையப் பார்த்திருக்கோம். நீங்க கூட அந்த மாதிரி இருக்கலாம். ஒரு நாளைக்கு ஒண்ணு அல்லது ரெண்டு கப் டீ குடிக்கிறதுல தப்பில்லை. ஆனா அளவுக்கு அதிகமா குடிக்கும்போது அது உடல்ல சில பெரிய பிரச்சனைகளை உண்டாக்கும். இந்த மாதிரி சூழல்ல திடீர்னு டீயை நிறுத்துறது நல்லதா? ஒரு மாசம் டீ குடிக்காம இருந்தா என்ன நடக்கும்? இந்தக் கேள்விகளுக்கான பதிலை இந்த கட்டுரையில பார்ப்போம்.
முற்றிலுமா டீ குடிப்பதை நிறுத்தும்போது என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ஒரு மாசம் டீயை தவிர்த்தா, உடம்புல இருக்கிற காஃபைன் அளவு குறையும். இதனால நமக்கு நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதோடு, மனப்பதட்டமும் குறையும். டீயில் இருக்கிற டையூரிடிக் பண்பு அதிக அளவு டீ குடிக்கும்போது நம்ம உடம்புல இருக்கிற நீர்ச்சத்தை குறைக்கும். அதனால டீ குடிக்கிறதை நிறுத்துறது நீர்ச்சத்து குறைபாடு தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும். அதுமட்டுமில்லாம, டீயை நிறுத்துறது செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்துற ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்கும். இதனால செரிமான பிரச்சனைகளும், ஒரு சில புற்றுநோய்களும் வராமல் தடுக்கலாம்.
டீயை திடீர்னு நிறுத்தும்போது என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படலாம்? ஒரு சிலருக்கு டீ குடிக்கிறது ஒரு விதமான ஆறுதலையும், ஓய்வையும் கொடுக்கும். அதனால டீயை நிறுத்தினதும் மன ரீதியான சிக்கல்கள் வர வாய்ப்பிருக்கு. சிலருக்கு சோர்வு, மந்தத்தன்மை, தூக்கம், தலைவலி, கவனச்சிதறல் மாதிரியான அறிகுறிகள் வரலாம். ஆனா இது சில நாட்களுக்கு மட்டும்தான் இருக்கும். உடம்பு டீயில்லாம இருக்கப் பழகினதுக்கு அப்புறம் இந்த பிரச்சனைகள் தானா சரியாகிடும்.
டீக்கு பதிலா என்ன குடிக்கலாம்? உங்க உணவுப் பட்டியலிருந்து டீயை முற்றிலுமா நீக்கணும்னு முடிவு செஞ்சா, அதுக்கு பதிலா மூலிகை தேநீர், பழச்சாறு அல்லது சுடு தண்ணி குடிக்கலாம். சாமந்திப்பூ, புதினா மாதிரியான காஃபைன் இல்லாத மூலிகை தேநீர்கள் நமக்கு நல்ல பலன்களை கொடுக்கும். ஆப்பிள் அல்லது கிரான்பெர்ரி மாதிரியான பழச்சாறுகள் உடம்புக்கு புத்துணர்ச்சி தரும். அதே மாதிரி, சுடு தண்ணியில எலுமிச்சை அல்லது தேன் கலந்து குடிக்கும்போது அது டீ மாதிரி ஒரு கதகதப்பான உணர்வை கொடுக்கும்.
சில நபர்கள் கட்டாயமா டீ குடிக்கிறதை தவிர்க்கிறது நல்லது. நெஞ்செரிச்சல் அல்லது சென்சிடிவ் ஸ்டொமக் மாதிரி பிரச்சனைகள் இருக்கிறவங்க காஃபைன் மற்றும் டானின் இருக்கிற டீயை தவிர்க்கணும். கர்ப்பிணி பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள் மிதமான அளவு டீ குடிக்கிறது நல்லது. அதிகமா குடிச்சா கருவுல இருக்கிற சிசுவுக்கு பாதிப்பு வரலாம். ரத்த சோகையால பாதிக்கப்பட்டிருக்கிறவங்களும் டீ குடிக்கிறதை தவிர்க்கணும். டீல இருக்கிற டானின், உடம்புல இரும்புச்சத்தை சேர்றதை தடுக்கும். இதனால ரத்த சோகை இன்னும் மோசமாகலாம்.
கடைசியா, உங்க தனிப்பட்ட உடல்நலனுக்கு எது சரி, ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம்னு தெரிஞ்சிக்கிறதுக்கு நீங்க டாக்டரை அணுகி ஆலோசனை கேட்கிறது அவசியம்.
This article explains the effects of giving up tea for a month. It details the benefits, such as improved sleep, reduced anxiety, and better hydration, as well as potential side effects like fatigue and headaches, which are temporary. The text also suggests alternatives to tea like herbal tea, fruit juice, and warm water, and advises certain individuals, such as pregnant women and those with anemia, to avoid or limit tea consumption. It concludes by recommending that people consult a doctor for personalized health advice.