குருணாகல், ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமுனுகொலே பிரதேசத்தில், தனியாக வசித்து வந்த 68 வயதுடைய தாய் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை சம்பவம் நேற்று புதன்கிழமை (20) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தினமும் தொலைபேசியில் நலன் விசாரிக்கும் வழக்கம் கொண்ட அவரது மகன், நேரில் சென்று பார்த்தபோது இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.