Saturday, August 30, 2025

தமிழர் பகுதியில் விவசாயிகள் நிலங்களை அபகரிக்க தனியார் நிறுவனம் அடாவடி!

திருகோணமலை பட்டணம் மற்றும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முத்து நகர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், சூரிய மின் சக்தி உற்பத்திக்கு மேலும் ஒரு தனியார் நிறுவனம் நேற்று நுழைந்ததால், விவசாயிகளுக்கும் அந்த நிறுவன ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் கைகலப்பாக மாறியது.

இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக இலங்கை துறைமுக அதிகார சபை அதிகாரிகளும், குறித்த திட்டக் குழுவினரும் அங்கு வந்தபோது, அவர்களைத் தடுக்க முயன்ற விவசாயிகளைத் தனியார் நிறுவன ஊழியர்கள் தாக்கியதாகத் தெரியவருகிறது.

சூரிய மின் சக்தி உற்பத்திக்காக முத்து நகர் பகுதியில் விவசாயிகளின் விவசாய நிலங்கள் ஏற்கனவே அபகரிக்கப்பட்டுத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மேலும் ஒரு விவசாய நிலத்தில் திட்டத்தை தொடங்க சென்றபோதே இந்தக் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மையில், அபகரிக்கப்பட்ட தங்களது விவசாய நிலங்களை மீட்டுத்தரக் கோரி முத்து நகர் பகுதி விவசாயிகள் பல போராட்டங்களை முன்னெடுத்தனர்.

வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படாத நிலங்களில் விவசாயம் செய்வதற்கு ஒத்துழைப்பதாக, திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னர் உறுதியளித்திருந்தபோதிலும், அது இதுவரை சாத்தியமாகவில்லை.

A conflict erupted between farmers and private company employees in the Muthunagar agricultural area of Trincomalee when another private company attempted to begin a solar power project on the land. Farmers, who have already lost their land to similar projects, tried to prevent the company from accessing the site and were reportedly assaulted. Despite previous promises from National People’s Power MPs to support the farmers in cultivating the undeveloped land, the situation remains unresolved.

Hot this week

முடி வளர்ச்சிக்கு வெங்காயத்தினை இப்படி தான் பயன்படுத்தணுமா?

முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெங்காயச் சாறு ஒரு சிறந்த தீர்வாகக்...

கென்யாவில் யானைக்கு பியர் கொடுத்த சுற்றுலாப் பயணி – விசாரணை!

கென்யாவில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவர், யானையின் தும்பிக்கையில் பியரை ஊற்றி...

நடைப்பயிற்சி: ஜப்பானிய டெக்னிக்! மூட்டு வலி, சர்க்கரை நோய் குறையும்!

நடைப்பயிற்சியின் மூலம் உடல் எடையைக் குறைத்து, உடல் நலனை மேம்படுத்த முடியுமா...

பல்கலைக்கழக பகிடிவதை: 4 மாணவர்கள் கைது!

களனி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம்...

யாழ்ப்பாணத்தில் உணவக கழிவு நீரை வெளியேற்றியவருக்கு அபராதம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் கழிவு நீரை வீதியில்...

Topics

Gold Loan officer (Male) Vacancy

Vacancy available in Alliance Finance Kurumankadu as Gold Loan officer...

திருமணமான பெண் வீட்டை விட்டு ஓட்டம்!

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில், திருமணமான ஒரு பெண், கடந்த ஓராண்டில் தனது...

பொலித்தீன் தொழிற்சாலையில் தீ விபத்து!

நவகமுவ, தெடிகமுவ ஜய மாவத்தையில் உள்ள ஒரு பொலித்தீன் உற்பத்தி செய்யும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img