திருகோணமலை, மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் நேற்று (01) பகல் ஏற்பட்ட தீ விபத்தில், பாடசாலை உபகரணங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
இந்தத் தீ விபத்து மின்சாரக் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
தீ விபத்து ஏற்பட்டவுடன், பொதுமக்களும், பிரதேச சபை ஊழியர்களும், பாடசாலை ஆசிரியர்களும் இணைந்து நீரைப் பயன்படுத்தித் தீயை அணைக்க முயற்சித்துள்ளனர்.
சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும், இந்த விபத்தினால் மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் இருந்த பெறுமதியான கதிரைகள், மேசைகள் மற்றும் பல உபகரணங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.
A fire broke out in the storeroom of Muthur Central College in Trincomalee yesterday, destroying school furniture and other valuable equipment. The fire is suspected to have been caused by an electrical short circuit. The fire was brought under control after a half-hour effort by the public, local council employees, and school staff.