Friday, December 5, 2025

திருமணமான பெண் வீட்டை விட்டு ஓட்டம்!

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில், திருமணமான ஒரு பெண், கடந்த ஓராண்டில் தனது கணவரை விட்டு 10 முறை காதலனுடன் ஓடிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்ராம் என்பவர், ஒரு வருடத்திற்கு முன்பு மேகா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன சில நாட்களிலேயே, மேகா அதே பகுதியைச் சேர்ந்த தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

ஊர் பெரியவர்களின் வற்புறுத்தலினால், சுக்ராம் மனைவியைத் தேடிச் சென்று மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார். ஆனால், மேகா தொடர்ந்து வீட்டில் இருக்காமல், கடந்த ஓராண்டில் மட்டும் தனது காதலனுடன் 9 முறை ஓடிவிட்டார்.

கடைசியாக, 8 நாட்களுக்கு முன்பு மீண்டும் காதலனுடன் ஓடிவிட்டதால் சுக்ராம் நேரடியாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

தனது மனைவி மீது எந்த வழக்கும் பதிவு செய்ய வேண்டாம் என்றும், அவரைத் தன்னுடன் அனுப்பி வைத்தால் போதும் என்றும் சுக்ராம் கேட்டார். பொலிஸார் அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து மீண்டும் சுக்ராமிடம் ஒப்படைத்தனர்.

ஆனால், அடுத்த நாளே மேகா மீண்டும் தனது காதலன் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

இதையடுத்து, சுக்ராம் கிராம பஞ்சாயத்தைக் கூட்டி தனது பிரச்சினையைத் தெரிவித்தார். பஞ்சாயத்தார் மேகாவை வரவழைத்து, கணவனுடன் வாழும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால், மேகா அதற்குச் சம்மதிக்கவில்லை. சுக்ராம் தனது மனைவி தன்னுடன் வரவேண்டும் என பிடிவாதமாக இருந்ததால், பஞ்சாயத்தார் குழப்பமடைந்தனர்.

அப்போது, அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், மேகாவே ஒரு முடிவை அறிவித்தார். அதாவது, ஒரு மாதத்தில் 15 நாள் கணவன் வீட்டிலும், 15 நாள் காதலன் வீட்டிலும் மாறி மாறி வாழ்வதாகக் கூறினார்.

இந்த முடிவைக் கேட்டு பஞ்சாயத்தில் இருந்த பெரியவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதே நேரத்தில், அதிர்ச்சியில் உறைந்துபோன சுக்ராம், “எனது மனைவி அவளது காதலனுடனேயே வாழட்டும், எனக்கு வேண்டாம்” என்று கூறிவிட்டார்.

In a bizarre incident from Uttar Pradesh, India, a woman who had run away from her husband ten times in a year announced a unique arrangement to her husband and the village council: she would live with her husband for 15 days and with her lover for the remaining 15 days of the month. The husband, who had been repeatedly bringing her back, was so stunned by her proposition that he gave up and decided to let her live with her lover.

Hot this week

கொழும்பில் இரவு அனர்த்தம்: மேயர் விராய் கெலி பல்சதார் செயல்பாடு

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95 ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால்...

வடகிழக்கு பருவமழை படிப்படியாக உருவாகிறது

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

Job vacancy available Female

வேலை வாய்ப்பு பெண்கள் மட்டும் 1. A/L முடித்தவர் 2. அடிப்படை கணினி அறிவு 3. கணக்கியல்...

Vacancy Driving 

வேலைவாய்ப்பு – Driving எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர்...

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த...

Topics

கொழும்பில் இரவு அனர்த்தம்: மேயர் விராய் கெலி பல்சதார் செயல்பாடு

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95 ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால்...

வடகிழக்கு பருவமழை படிப்படியாக உருவாகிறது

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

Job vacancy available Female

வேலை வாய்ப்பு பெண்கள் மட்டும் 1. A/L முடித்தவர் 2. அடிப்படை கணினி அறிவு 3. கணக்கியல்...

Vacancy Driving 

வேலைவாய்ப்பு – Driving எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர்...

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த...

அவசரகாலத்தில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை தண்டனை

அவசரகாலத்தில் பொதுமக்களிடையே குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்வகையில் சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில்...

யாழில் பகலில் வெட்டுக்கொலை; ஆறு பேருக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று தொடக்கம்

இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img