பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் உள்ள ஒரு லைன் குடியிருப்பில் திங்கட்கிழமை (25) காலை 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 20 வீடுகளைக் கொண்ட அந்தக் குடியிருப்புத் தொகுதியில் 6 வீடுகள் தீயில் சேதமடைந்தன.
இந்த விபத்தில், வீடுகளுக்குள் இருந்த உடைமைகளும் சேதமடைந்தன. எனினும், குடியிருப்பாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தோட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் தீ உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.