பிரபல ஹொலிவுட் நடிகையான ஒலிவியா கோல்மேன், இலங்கையின் உணவுகள் தனக்கு மிகவும் பிடித்தமானவை என்றும், உலகின் சிறந்த உணவு இலங்கையில்தான் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
‘தி ரோஸஸ்’ (The Roses) திரைப்படத்திற்காக அவர் வழங்கிய நேர்காணலின்போதே இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார். அண்மையில் அவர் விடுமுறைக்காக இலங்கை சென்றிருந்தபோது, அங்கு உட்கொண்ட உணவுதான் தன்னுடைய வாழ்க்கையிலேயே சிறந்த உணவு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
During an interview for her film ‘The Roses’, Hollywood actress Olivia Colman stated that Sri Lankan cuisine is her favorite and the best in the world. She mentioned that the food she had while on vacation in Sri Lanka was the best she had ever tasted.