கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவின் ஹெட்டிகம பகுதியில் உள்ள கிம்புல்வா ஓய மண்டலபல பாலத்திற்கு அருகே நீரில் மிதந்தவாறு காணப்பட்ட ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலமாக மீட்கப்பட்டவர், ஹெட்டிகம, கும்புக்கெட்டே பகுதியைச் சேர்ந்த 80 வயது முதியவர் என தெரியவந்துள்ளது. இந்த மரணம் நீரில் மூழ்கியதால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் சந்தேகத்திற்கிடமான காரணம் உள்ளதா என்பது குறித்து கும்புக்கெட்டே பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
அதேபோல, பல்லேகலே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திறந்தவெளி சிறைச்சாலை முகாமுக்கு அருகிலுள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் காணப்பட்ட ஒரு ஆணின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சடலம், பார்பர் வத்தை, குன்னேபான பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஒருவருக்கு சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக பல்லேகலே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Two bodies were recovered from different locations in Sri Lanka. One was a body of an 80-year-old man found floating near a bridge in the Kumbukkete police division. Police are investigating whether the death was due to drowning or another suspicious cause. The second body, belonging to a 63-year-old man, was found in the Victoria Reservoir near the Pallakale Open Prison Camp. Both police divisions are conducting further investigations.