இந்தியாவில் அசாம் மாநிலம் கந்தமாள் மாவட்டத்தில் 8 பாடசாலை மாணவர்களின் கண்கள் பசையால் ஒட்டப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது!
கந்தமாள் மாவட்டத்தின் சாலகுடா பகுதியில் உள்ள சேவாஷ்ரம் பாடசாலை விடுதியில் தங்கியிருந்த 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் எட்டு பேர் தூங்கிக்கொண்டிருந்தபோது, சக மாணவர்கள் சிலர் விளையாட்டாக அவர்களின் கண்களில் இன்ஸ்டன்ட் பசையைத் தேய்த்துள்ளனர். இதனால் தூக்கத்திலிருந்து விழித்தபோது, அவர்களால் கண்களைத் திறக்க முடியாமல் இமைகள் ஒட்டிக்கொண்டன.
உடனடியாக அந்த மாணவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதன் முதல் நடவடிக்கையாக, அப்பாடசாலையின் தலைமை ஆசிரியர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் செயலைச் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
In India, eight school students’ eyes were glued shut as a prank by their peers while they were sleeping. The students were admitted to a hospital for treatment. In response, the school’s headmaster was suspended, and the district administration has vowed to take strict action against the culprits.