யாழ்ப்பாணம், சுன்னாகம் தெற்குப் பகுதியைச் சேர்ந்த 7 வயதுச் சிறுவன் ஒருவன், பட்டம் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளான்.
சிறுவன் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் திகதி பட்டம் விட்டுக்கொண்டிருந்தபோது உடல்நலக்குறைவுக்கு உள்ளாகியுள்ளான். உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவன் மயக்கமடைந்துள்ளான். சிகிச்சை பலனின்றி, நேற்று (செப்டம்பர் 3) மாலை அவன் உயிரிழந்துள்ளான்.
சிறுவனின் சடலம் மீதான மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூறு பரிசோதனையில், மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாகவே சிறுவன் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
A 7-year-old boy from Chunnakam South in Jaffna has died after collapsing while flying a kite. The boy fell ill on August 31st and was taken to Jaffna Teaching Hospital, where he lost consciousness. He passed away yesterday (September 3) despite receiving medical treatment. A post-mortem examination revealed that the cause of death was a brain hemorrhage.