யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இன்று (3) இடம்பெற்ற ரயில் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில், சுன்னாகத்தைச் சேர்ந்த 44 வயதுடைய உஷாநத் சங்கீதா என்பவர் உயிரிழந்துள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அவர் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
A 44-year-old woman, identified as Ushanth Sangeetha from Chunnakam, was killed in a train accident today in the Kodikamam area of Jaffna. The incident occurred when she was hit by a train traveling from Jaffna to Colombo as she attempted to cross the railway tracks. Police are conducting a further investigation into the incident.