நாட்டின் இருவேறு இடங்களில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவினரை பொலிஸார் கைது!
கலேவெல மற்றும் பண்டாரதுவ பகுதிகளில் சட்டவிரோதமாகப் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் குழுக்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கலேவெல பொலிஸ் பிரிவின் மாதிபொல பகுதியில் நேற்று மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது, புதையல் தோண்டிக்கொண்டிருந்த ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அகழ்வுக்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் பூஜைப் பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மாதிபொல, வெலிகந்த, மில்லவான, தம்மின்ன மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 28-58 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பண்டாரதுவ பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின்படி, பண்டாரதுவ பொலிஸ் பிரிவின் நவகிரியாவ பகுதியில் நேற்று மாலை சோதனை நடத்தப்பட்டது. இதன்போது, புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர் ஒருவரும், அதற்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் பூஜைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட 63 வயதுடைய சந்தேகநபர், நவகிரியாவ, கோனாகொல்ல பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், மொரகொட பொலிஸ் பிரிவின் ஹல்மில்லேவ பகுதியில் நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையின்போது, சட்டவிரோதமாக இரண்டு தந்தங்களை வைத்திருந்ததாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 46 வயதுடைய அந்த சந்தேகநபர், நாமல்புர, கலேன்பிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Police have arrested several people in two separate incidents of illegal treasure digging in Kalawewa and Bandaraduwa. In Kalawewa, seven suspects aged 28-58 were arrested with digging equipment and ritual items. In Bandaraduwa, a 63-year-old man was also arrested with similar items. In a third, unrelated incident in Moragoda, a 46-year-old man was arrested for the illegal possession of two elephant tusks.