புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில், பாலாவிய சந்திக்கு அருகில், புத்தளத்திலிருந்து மதுரங்குளிய நோக்கிச் சென்ற லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்தவர் மதுரங்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
A lorry collided with a motorcycle on the Puttalam-Colombo main road, resulting in a fatal accident. One person, the motorcyclist, succumbed to his injuries while receiving treatment at the hospital. The lorry driver has been arrested, and the Puttalam police are conducting further investigations.