இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில், வீட்டு உபயோகப் பொருட்களைத் திருடியதாகச் சந்தேகிக்கப்பட்ட ஒரு பெண்ணை, கிராம மக்கள் கொடூரமாகத் தாக்கி, அவரது தலைமுடியை வெட்டி, அரை நிர்வாண நிலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரிதிக் மாவட்டம் பிப்ராலி கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், அந்தப் பெண்ணின் கழுத்தில் செருப்பு மாலையை அணிவித்து கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த மனிதநேயமற்ற செயலைச் சுற்றி நின்றவர்கள் சிலர் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், சம்பவ இடத்திற்குச் விரைந்து சென்ற பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், காணொளியில் உள்ள மற்றவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
In a shocking incident in Jharkhand, India, a woman was brutally assaulted, stripped, and paraded through a village by locals who suspected her of stealing household goods. The villagers in Piprali village, Giridih district, cut her hair and put a garland of shoes around her neck before forcing her to walk semi-nude. Police rescued the woman after being alerted to the incident. Three women have been arrested in connection with the assault, and authorities are working to identify and apprehend others involved, based on videos circulating on social media.