இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்த 32 வயதான பெண் வைத்தியர் பி.மதரா மதுபாஷினி, பேருந்து விபத்தில் படுகாயமடைந்து 14 நாட்களுக்குப் பின்னர் திங்கட்கிழமை (01) உயிரிழந்துள்ளார்.
ஒரு குழந்தையின் தாயான இவர், கடந்த மாதம் 19ஆம் திகதி வேலையை முடித்துவிட்டுத் தனியார் பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியில் பெல்மடுல்ல பொலிஸ் நிலையத்திற்கு அருகில், ஒரு முச்சக்கர வண்டி திடீரென வீதியைக் கடக்க முயன்றதால், பேருந்துச் சாரதி அவசரமாக பிரேக் பிடித்துள்ளார்.
இதனால், கதவுக்கு அருகில் இருந்த வைத்தியர் வெளியே தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்துள்ளார்.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
A 32-year-old female doctor, P. Madara Madubashini, working at the Ratnapura Teaching Hospital, died on Monday (September 1) after succumbing to injuries from a bus accident that occurred 14 days earlier. The doctor, a mother of one, was on her way home on August 19 when a private bus she was traveling in braked suddenly to avoid a three-wheeler. She was thrown out of the bus, sustaining severe injuries. She was in the Intensive Care Unit for two weeks before her death.