அம்பாந்தோட்டை, தங்காலை, மஹாவெல பகுதியில் இன்று (27) இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 11 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து, மாத்தறையில் இருந்து தங்காலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும், தங்காலை நகரில் இருந்து திக்வெல்ல நோக்கிச் சென்ற மற்றொரு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் நகுலுகமுவ மற்றும் தங்காலை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
An accident occurred in Mahawela, Tangalle, when two Sri Lanka Transport Board (SLTB) buses collided head-on, resulting in injuries to 11 passengers. One bus was traveling from Matara to Tangalle, while the other was en route from Tangalle to Dickwella. The injured were taken to Nakulugamuwa and Tangalle hospitals for treatment. The Tangalle Police are conducting further investigations into the incident.