பொரளை, காதர்நானா பகுதியில் கடந்த 22 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வெல்லம்பிட்டி பகுதியில் வைத்து இந்த இரு சந்தேக நபர்களையும் பொரளை பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


