ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர், காவல்துறை நிலையத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக ஹுரிகஸ்வெவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண், பொரலுகந்த பகுதியில் 2 கிராம் 160 மில்லி கிராம் ஹெரோயினுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட பெண், ஹுரிகஸ்வெவ காவல் நிலையத்தின் சிறைக்கூண்டில் அடைக்கப்பட்டிருந்தபோது, கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து, பெண் காவல்துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணை காவல் நிலையக் கட்டிடத்திற்கு வெளியே உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது, அந்தப் பெண் திடீரென காவல்துறை அதிகாரிகளைத் தள்ளிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தப்பிச் சென்ற அந்தப் பெண்ணைக் கைது செய்வதற்கான விசாரணைகளை ஹுரிகஸ்வெவ காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
A woman who was arrested with heroin has escaped from police custody in Hurigaswewa. The suspect, who was detained at the Hurigaswewa police station, asked to use the restroom. While being escorted by female officers to a washroom outside the building, she pushed them and fled. Police are now conducting an investigation to re-arrest her.