கண்டி நகரில், போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட கார் ஒன்றை ஓட்டி வந்த 48 வயதுடைய பெண் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட வைத்தியர், அந்தக் கார் தனது கணவருக்குச் சொந்தமானது என்று பொலிஸாரிடம் கூறியுள்ளார். விசாரணையின் போது, அந்தக் காருக்கு எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும், காரில் பொருத்தப்பட்டிருந்த இலக்கத் தகடுகள் அவரது கணவரின் சகோதரரின் காருக்குச் சொந்தமானது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
A 48-year-old female doctor was arrested in Kandy for driving a car with a fraudulent license plate. The doctor, who claimed the car belonged to her husband, could not produce any documents for the vehicle. An investigation by the Kandy Crimes Division revealed that the license plate on the car belonged to her brother-in-law’s vehicle.