மட்டன் குருமா சாதத்துக்கும் ரொட்டிக்கும் ஏற்ற ஒரு சைட் டிஷ். இதனை எப்படி எளிமையாகவும் சுவையாகவும் செய்யலாம் என்று பார்க்கலாம். இதில் வெங்காயம், தக்காளி, மசாலா கலவைகளைச் சேர்த்து செய்வதால் இதன் சுவை சற்று அதிகமாகவே இருக்கும்.
தேவையான பொருட்கள்:
- மட்டன் – அரை கிலோ
- தயிர் – 1 கப்
- இஞ்சி விழுது – 3 டேபிள் ஸ்பூன்
- பூண்டு விழுது – 3 டேபிள் ஸ்பூன்
- பொரித்த வெங்காயம் – 1 கப்
- கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
- பட்டை – 2
- பிரியாணி இலை – 2
- ஏலக்காய் – 6
- கிராம்பு – 6
- கருப்பு ஏலக்காய் – 2
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
- எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
படி 1: முதலில் ஒரு பாத்திரத்தில் மட்டனை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மட்டனை 5 நிமிடங்கள் நன்றாக ஊற வைக்கவும்.
படி 2: அடுத்து, ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், கருப்பு ஏலக்காய், சிறிதளவு கரம் மசாலா, அரை கப் வெங்காயம், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்க வேண்டும்.
படி 3: பின்பு, ஊற வைத்த மட்டனை அதில் சேர்த்து நன்கு வதக்கவும். மட்டன் வேகத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கலவை கொதித்து வந்ததும் குக்கரை மூடி வைக்க வேண்டும். 5 முதல் 6 விசில் வரும்வரை வேக வைத்து, விசில் அடங்கியதும் குக்கரைத் திறக்கவும்.
படி 4: அவ்வளவுதான்! சுவையான மட்டன் குருமா தயார். இதனைச் சாதம், ரொட்டி, இட்லி, தோசை என எதனுடன் சேர்த்துச் சாப்பிட்டாலும் ருசியாக இருக்கும்.