அமெரிக்காவில் முதல்முறையாக ‘நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவோர்ம்’ (New World Screwworm) எனப்படும், மனித சதையை உண்ணும் ஒட்டுண்ணி புழு ஒருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மேரிலாந்து மாகாணத்தில் நடந்துள்ளது.
இந்த ஒட்டுண்ணித் தொற்று கண்டறியப்பட்ட நபர், அண்மையில் குவாத்தமாலா என்ற நாட்டிலிருந்து அமெரிக்காவுக்குத் திரும்பியுள்ளார். ஆனால், சில தகவல்கள் அவர் எல் சால்வடோர் என்ற நாட்டிலிருந்து வந்ததாக முரண்பட்ட தகவலைக் கொடுக்கின்றன.
இந்த ஒட்டுண்ணி மத்திய அமெரிக்கா மற்றும் தென் மெக்சிகோவில் 2023-ஆம் ஆண்டிலிருந்து வடக்கு நோக்கிப் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இது பொதுவாக கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளை அதிகம் பாதிக்கும். அரிதாகவே மனிதர்களுக்குப் பரவும் என்றும் கூறப்படுகிறது.
A man in Maryland, who recently traveled from either Guatemala or El Salvador, has been diagnosed with the New World Screwworm parasite for the first time in the US. This flesh-eating parasite, which has been spreading northward from Central America since 2023, primarily affects livestock and wildlife but can also infect humans.