ஹட்டன் வட்டவல பகுதியில் உள்ள வெலிஓயா தோட்டத்தில் மூத்த உதவி தோட்ட முகாமையாளராக பணிபுரிந்து வந்த ஒருவர், தனது உத்தியோகபூர்வ இல்லத்தின் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள், குறித்த தோட்ட முகாமையாளர் இன்று (25) காலை வழமை போன்று கடமைக்குச் சமூகமளிக்க தாமதமானதால், அவருடன் அதே உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிபுரியும் சமையல்காரர் அவரை சென்று பார்த்துள்ளார். அப்போது, அவர் குளியலறைக்குள் விழுந்து கிடந்துள்ளார்.
இது குறித்து உடனடியாக வட்டவல பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர் குளியலறையில் வழுக்கி விழுந்த போது சுவரில் தலை மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.