இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், இலங்கை முழுவதும் 36,708 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 2,749 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த வருடத்தில் டெங்கு காய்ச்சலால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
டெங்கு மற்றும் சிக்கன்குனியா ஆகிய நோய்கள் தற்போது வேகமாகப் பரவி வருவதால், காய்ச்சல் உள்ளவர்கள் பரசிட்டமோல் (Paracetamol) மாத்திரைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
காய்ச்சல் வந்த ஒருவர் டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால், வேறு வலி நிவாரணிகளை உட்கொள்வது உள் இரத்தப்போக்குக்கு (internal bleeding) வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே, பொதுமக்கள் இந்த விடயத்தில் மிகவும் விழிப்புடன் இருக்குமாறும், மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சையைப் பெறுமாறும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
The National Dengue Control Unit has reported that 36,708 dengue cases have been recorded in Sri Lanka during the first eight months of the year, with 2,749 cases alone in August. The unit also confirmed that 19 deaths from dengue have occurred this year. With dengue and chikungunya spreading rapidly, doctors have advised people with fever to take only paracetamol, as other pain relievers could lead to internal bleeding if they have dengue. The public has been urged to seek immediate medical attention if their fever lasts for more than three days.