யாழ்ப்பாணத்தில் பொருட்கள் வாங்கச் சென்ற ஒரு வர்த்தகர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர், யாழ்ப்பாணம், கொட்டடி, முத்தமிழ் வீதியைச் சேர்ந்த சின்னையா பிரேமானந்த் (வயது 58) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் 1.15 மணியளவில் யாழ் நகரில் உள்ள ஒரு கடைக்கு வெளியே திடீரென மயங்கி விழுந்த பிரேமானந்த், உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மரணம் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். இந்த விசாரணைகளுக்குத் தேவையான சாட்சியங்களை யாழ்ப்பாண பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.