பருத்தித்துறை மீன் சந்தையில் மீன் வியாபாரம் செய்துவரும் ஒருவர், வெற்றிலை மென்று பொது இடத்தில் துப்பியுள்ளார். இது பொது சுகாதாரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் செயல் என்பதால், பொது சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் அவர் மீது பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அந்த வியாபாரி நீதிமன்றத்தில் ஆஜராகி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, நீதிபதி அவரை கடுமையாக எச்சரித்ததுடன், 5,000 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
The Point Pedro Magistrate’s Court fined a fish vendor Rs. 5,000 for spitting betel juice in a public place. A public health inspector filed a case against the vendor after he was caught spitting at the Point Pedro fish market. The vendor pleaded guilty in court and was issued a stern warning along with the fine.