Monday, November 24, 2025

யாழ் இளைஞனின் திடீர் துப்பாக்கிச் சூடு: கனடாவில் பரபரப்பு – காவல்துறை அதிரடி நடவடிக்கை!

கனடாவில், துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு தமிழ் இளைஞனை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஒன்டாரியோவின் பிராட்போர்ட் பகுதியைச் சேர்ந்த 33 வயதான மகிபன் பேரின்பநாதன் என்ற இளைஞனே இவ்வாறு தேடப்படுகிறார்.

கடந்த மாதம் பிக்கரிங் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில், டர்ஹாம் பிராந்தியப் பொலிஸார் இவரைச் சந்தேக நபராக அடையாளம் கண்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி அதிகாலை 1.10 மணியளவில், லிவர்பூல் மற்றும் கிங்ஸ்டன் வீதிகள் சந்திக்கும் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரைக் கண்டறிந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அவர்களின் நிலைமை குறித்து மேலதிக தகவல்கள் எதையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மகிபன் பேரின்பநாதன் என்பவரே தற்போது சந்தேக நபராகப் பொலிஸாரால் தேடப்படுகிறார்.

Canadian police are searching for a Tamil man in connection with a shooting that injured two people in Pickering, Ontario. The suspect, identified as 33-year-old Magiban Perinpanathan from Bradford, is wanted for a shooting that occurred at a parking lot on August 16. Two victims were found at the scene and taken to the hospital, but their condition remains unknown.

Hot this week

பாசிக்குடா கடலில் நீராட சென்றவர் மாயம்

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில்...

ஜனாதிபதி அனுர குமாரவின் பிறந்த நாள் இன்று

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 57 ஆவது பிறந்தநாள் இன்று (24)...

சரிகமப இறுதிச்சுற்று; இலங்கை இளைஞனுக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான ஜீ தமிழ் ‘சரிகமப’ நிகழ்ச்சியின்...

குடும்பத்தை அழித்து தந்தை தற்கொலை

இந்தியாவில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு...

யாழ் பருத்தித்துறை வைத்தியசாலையில் இரவு களவரம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர்...

Topics

மிதிகம வர்த்தகர் உட்பட 7 பேரைக் கொல்ல திட்டமிட்டவர் கைது

மிதிகம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் உட்பட ஏழு பேரை கொலை செய்யத்...

பேருந்துகளில் வங்கி அட்டை கட்டணம் இன்று முதல் ஆரம்பம்

பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள்...

முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்து ஒருவர் பலி

மாவனெல்லை - ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் நேற்று (23) இடம்பெற்ற...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img