யூடியூப் தளம் தற்போது கோடிக்கணக்கானோரால் பொழுதுபோக்கு, வர்த்தகம், கல்வி எனப் பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பலரும் இந்தத் தளத்தைப் பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்கி, நல்ல வருமானத்தைப் பெற்று வருகின்றனர். பயனர்களுக்கு லாபகரமான ஒரு தளமாக யூடியூப் விளங்குகிறது. இந்த நிலையில், யூடியூப் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயனர்களின் வயதைக் கண்டறியும் புதிய நடைமுறையை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நடைமுறையின் முக்கிய நோக்கம், பயனர்களின் வயதைக் கண்டறிந்து, அவர்களுக்குப் பொருத்தமான உள்ளடக்கங்களை வழங்குவதே ஆகும். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்குப் பொருத்தமற்ற வீடியோக்கள் மற்றும் தகவல்கள் கிடைப்பதைத் தடுக்கும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவால், பயனர்கள் தங்கள் வயது குறித்த தவறான தகவல்களை இனி வழங்க முடியாது.
பயனர்கள் வழக்கமாகப் பார்க்கும் வீடியோக்கள், அவர்கள் தேடிய தகவல்கள், தொடர்ந்து பின்தொடரும் சேனல்கள் மற்றும் அவர்களின் விருப்பமான தலைப்புகள் போன்றவற்றின் அடிப்படையில் இந்த AI இயங்கும். தற்போது, வயது வரம்பு உள்ள வீடியோக்களைப் பார்க்க பயனர்கள் தங்கள் வயதை உறுதிப்படுத்த வேண்டும். இந்தச் சோதனை வெற்றி பெற்றால், பயனர்கள் தாங்களாகவே வயதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை குறையலாம். யூடியூப்பின் இந்த முயற்சி, டிஜிட்டல் தளங்களில் பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
YouTube has introduced a new AI-based system in the US to accurately determine the age of its users. This initiative aims to enhance user safety, especially for children and teenagers, by preventing them from accessing age-inappropriate content. The AI analyzes viewing habits, search history, and interests to verify a user’s age, which could eventually reduce the need for manual age verification.