அஞ்சல் நிலையங்களில் வழங்கப்படும் வைப்பு நிதித் திட்டங்கள், வழக்கமான வங்கி சேமிப்புக் கணக்குகளை விட அதிக வருமானம் ஈட்டித் தருவதால், பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.
குறிப்பாக, அஞ்சல் அலுவலக நேர வைப்புத் திட்டம் (Post Office Time Deposit – TD) மிகவும் பிரபலமானது. இந்தத் திட்டத்தில் 1, 2, 3 அல்லது 5 ஆண்டுகளுக்குப் பணத்தை முதலீடு செய்யலாம். காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்பட்டாலும், வருடாந்திர அடிப்படையில் வட்டி கிடைக்கும்.
தற்போதைய வட்டி விகிதங்கள்
- 1 ஆண்டு வைப்பு நிதிக்கு – 6.9%
- 2 ஆண்டு வைப்பு நிதிக்கு – 7.0%
- 3 ஆண்டு வைப்பு நிதிக்கு – 7.1%
- 5 ஆண்டு வைப்பு நிதிக்கு – 7.5%
5 ஆண்டு கால திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட பணம், இரட்டிப்பாகி வேகமாக வளரும். உதாரணத்திற்கு, ரூ.5 லட்சத்தை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து, மீண்டும் முதலீடு செய்வதன் மூலம், 10 ஆண்டுகளில் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக ஈட்ட முடியும்.
இந்தத் திட்டம், கிராமப்புற மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு நிலையான மற்றும் பாதுகாப்பான வருமானத்தைப் பெற சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.