செப்டம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ், மாதாந்திர விலை திருத்தத்தின்படி இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதன்படி,
- 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் – ரூ. 4,100
- 5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் – ரூ. 1,645
என்ற விலைகளில் தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.