பொதுவாகவே வயது அதிகரிக்கும்போது முகத்தில் சுருக்கங்கள் வருவது இயல்புதான். ஆனால் இந்த சுருக்கங்கள் வருவதற்கு அதிக நேரம் வெயிலில் அலைவது, முகத்தை சரியாகப் பராமரிக்காமல் இருப்பது போன்ற பல காரணங்களும் இருக்கின்றன. இப்படி வயதானாலும் முகத்தில் சுருக்கங்கள் விழாமல் தடுக்க உதவும் ஃபேஸ்பேக்-களை எப்படித் தயாரிப்பது என்று பார்ப்போம்.
1. கடலை மாவு Face pack தேவையான பொருட்கள்:
- கடலை மாவு- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
- தயிர்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை: முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள், தயிர் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
பின்னர், முகத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்த பிறகு, இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் சமமாகப் பூசவும்.
இதை சுமார் 30 நிமிடங்கள் காய விட்ட பிறகு, வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவிவிடலாம்.
2. முட்டைFace pack தேவையான பொருட்கள்:
- முட்டை- 1
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை: முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக்கரு, எலுமிச்சை சாறு, தேன் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்தக் கலவையை முகம் முழுவதும் சமமாகத் தடவ வேண்டும். கண்களுக்கு அருகில் படாமல் கவனமாகப் பூசுங்கள்.
சுமார் 20 நிமிடங்கள் முகத்தை உலர விட்ட பிறகு, வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவலாம்.