நானுஒயா எடின்புரோ தோட்டப் பகுதியில், ஒரு இளைஞன் தனது வளர்ப்பு நாயைக் கடுமையாகத் தாக்கி, பின்னர் அதை ஆற்றில் வீசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயலவருக்கும் அந்த இளைஞரின் குடும்பத்திற்கும் இடையில் இருந்த பகையே இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இந்த முன் விரோதத்தின் காரணமாகவே, அந்த இளைஞன் அப்பாவி நாயைத் தாக்கி ஆற்றில் வீசியுள்ளான்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, 15 வயதுடைய அந்த இளைஞனை நானுஒயா பொலிஸார் கைது செய்தனர். பின்னர், அவனைப் பொலிஸ் நிலையத்தில் வைத்தே பிணையில் விடுவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞனின் இந்தச் செயல் மிருகங்களுக்கு எதிரான சித்திரவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றம் என்பதால், அவனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
A video has gone viral on social media showing a young man from the Nanu Oya Edinburgh estate in Sri Lanka brutally assaulting his pet dog and throwing it into a river. The police arrested the 15-year-old suspect, who was later released on bail. The incident is believed to be the result of a long-standing feud between the teenager’s family and their neighbors. Local residents are demanding that legal action be taken against the youth under the Prevention of Cruelty to Animals Act.