Wednesday, October 15, 2025

வவுனியாவில் புகையிரதத்துடன் பட்டா மோதி விபத்து

வவுனியாவில் இன்று (01.09.2025) மாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் நான்கு வயதுக் குழந்தை உட்பட மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயில், வவுனியா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, மன்னார் வீதியில் உள்ள ரயில் கடவையில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு பற்றா வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பற்றா வாகனத்தில் பயணித்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் நான்கு வயதுக் குழந்தை ஆகியோர் காயமடைந்தனர்.

அவர்களின் வாகனம் கடும் சேதமடைந்துள்ளது. ரயில் சமிஞ்சையில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த விபத்து நடந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக, ரயில் கடவையில் ஊழியர் ஒருவர் 24 மணிநேரமும் பணியில் இருப்பார். ரயில் கடந்து செல்லும் போது மூடப்படும் பாதுகாப்பு கதவு, இன்று மூடப்படாததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தினால், ரயில் அரை மணி நேரம் தாமதமாகவே தனது பயணத்தைத் தொடங்கியது. சம்பவம் குறித்து வவுனியாப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

A train accident in Vavuniya today injured three people, including a four-year-old child, who were all traveling in a pickup truck. The train, which was traveling from Colombo to Jaffna, collided with the truck at a railway crossing. The accident is believed to have been caused by a signal malfunction, as the safety gate at the crossing, which is normally manned by a 24-hour employee, was not closed. Police are investigating the incident.

Hot this week

பேருந்து நிலையத்தில் சிறுமிக்கு முத்தம் கொடுத்த போலீஸ்; சம்பவம்

பிபில பேருந்து நிலையத்தில் பகலில் பத்து வயது சிறுமியை குடிபோதையில் முத்தமிட்டதற்காக...

Vacancy Delivery Boy

DOMEX COURIER Delivery Boy vacancy available Bike needed Age below 50 0771234885

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிரடியாக கிளம்பிய சண்டை; வெளிப்படும் எப். ஜேவின் உண்மையான முகம்

பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் எப். ஜேவின் உண்மை முகம்...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு; இலங்கையில் இருந்து 100 இளம் பெண்கள் பயணம்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் தென் கொரியாவிற்கு வேலைவாய்ப்புக்காக 2,927 இலங்கையர்கள்...

பசறை சுரங்க விபத்து; மண் சரிவில் ஒருவர் உயிரிழப்பு

பசறை பொலிஸ் பிரிவின் ஆகரதென்ன பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் இன்று...

Topics

வங்கிக் கணக்கில் 5.69 இலட்சம் ரூபாய் மோசடி; நால்வர் கைது

2024 மே 29 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண கணினி...

மட்டக்களப்பு; யானைத் தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏரளக்குளம் பகுதியில், வயலில் இருந்து வீடு...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயமானது தற்போது நாட்டின் வானிலையில் தாக்கம்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img