கப்பறைக்கல்லா, அநுராதபுரம் பகுதியில் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதி இரவு அநுராதபுரம், கப்பறைக்கல்லா பகுதியில் விசேட அதிரடிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு நிறுத்தாது சென்ற கப்ரக் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதன்போது, அதில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இவ்வாறு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்திரசேகர் (வயது 41) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே சிகிச்சை பலனின்றி இன்று (செப்டம்பர் 01) காலை உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.