கொழும்பின் வெல்லம்பிட்டி – கித்தம்பவ்ப பகுதியில் இன்று (ஆகஸ்ட் 25) அதிகாலை ஒரு விடுதியில் தங்கியிருந்த தம்பதியினரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய மூன்று சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


