வவுனியா கனகராயன்குளம், கொல்லர்புளியங்குளம் பகுதியில் நேற்று (24.08.2025) மதியம் இடம்பெற்ற விபத்தில், துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த கென்ரர் ரக வாகனம் ஒன்று, கொல்லர்புளியங்குளம் பகுதியில் எதிரே துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கரவண்டி ஓட்டுநர், உடனடியாக மாங்குளம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர், அதே பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய முத்து ராமலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கனகராயன்குளம் பொலிஸார் இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.